×

தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு என்ற பெயரில் பொதுமக்களிடம் சுமார் ரூ.100 கோடி மோசடி..!!

கும்பகோணம்: தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு என்ற பெயரில் பொதுமக்களிடம் சுமார் ரூ.100 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கும்பகோணம் முல்லை நகரை சேர்ந்த அர்ஜுன் கார்த்திக் என்பவர் அதே பகுதியில் ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி என்ற பெயரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிதி நிறுவனம் தொடங்கியதா கூறப்படுகிறது. அதில் கணக்காளர்களாக அவான்ஜிலின், ஊழியர்களாக கார்த்திக், ராஜா, ராதாகிருஷ்ணன் ஆகியோர் பணியாற்றி உள்ளனர்.

தங்கள் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.15,000 வீதம் 18 மாதங்கள் வழங்கப்படும் என கூறி பொதுமக்களிடம் பணத்தை பெற்றுள்ளனர். அதனை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாகவும் கூறியுள்ளனர். பலர் கமிஷன் அடிப்படையிலும் அந்த நிறுவனத்திற்கு முதலீட்டை பெற்று கொடுத்த நிலையில் கூறியபடி சில மாதங்கள் பணம் வழங்கிய நிறுவனம் திடீரென மூடப்பட்டதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் இந்த நிறுவனத்தில் அதிகளவில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் நடந்த ரூ.100 கோடி மோசடி புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு என்ற பெயரில் பொதுமக்களிடம் சுமார் ரூ.100 கோடி மோசடி..!! appeared first on Dinakaran.

Tags : Thanjam ,Thiruvarur ,Kumbakonam ,Thanjai ,Nagai ,
× RELATED திருவாரூரில் காற்றுடன் கனமழை..!!